இட்லி மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட்லி மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"உடனடி இட்லி தோசை மா ஸ்லோ பாய்சன்" அதிர்ச்சி தகவல்.

கலப்படம் இல்லாத பொருட்களே இன்று இல்லை எனும் அளவிற்கு கலப்படங்களோடு இரண்டரக்கலந்து காலத்தை ஓட்டிவருகின்றோம்.உப்பு முதல் ஊற்காய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும் சமையல் சாமான்கள் தாராளமாகக் கிடைப்பதால் வீடுகளில் சுயமாகத் தயாரிக்கும் எண்ணமே மக்களிடத்தில் மறைந்து போயிற்று.எனவே தாம் இன்று இட்லி,தோசை மாவுக்கு கூட நாம் கடைகளை நோக்கி ஓடும் அவலம்!

இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.