இசையமைப்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசையமைப்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்ற இரண்டு முகம் காட்டி வந்த ஆண்ட்ரியாவுக்கு மனதளவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையும் நீண்டகாலமாக உள்ளதாம். அதனால்தான், அனிருத் மாதிரியான இசையமைப்பாளர்களுடன் நட்பு வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாராம் ஆண்ட்ரியா. ஆனால் அதையடுத்து அவர்களது நட்பு ஏடாகூடாமான சங்கதி நாடறிந்ததே.

ஆனபோதும், இசையமைப்பாளராகியே தீருவது என்ற தனது கொள்கையில் இருந்து பின்வாங்காமல் இருந்த ஆண்ட்ரியா, அவ்வப்போது தன் மனசுக்கு தோன்றும் டியூன்களை தனது செல்போனிலேயே பதிவு செய்து வந்திருக்கிறார். கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்து வந்தபோது, அந்த ஸ்பாட்டில் அவ்வப்போது தனியே அமர்ந்து டியூன்களை ரெக்கார்ட் செய்ததை பார்த்த கமல், அவற்றை கேட்டு பார்த்து ஆண்ட்ரியாவை தட்டிக்கொடுத்திருக்கிறார்.