ஆஸ்கார் விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஸ்கார் விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் அட்டன்போரக் காலமானார்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ரிச்சர்ட் அட்டன்போரக் லண்டனில் நேற்று காலமானார். இத்தகவலை அவரது மகன் மைக்கேல் அட்டன்போரக் அறிவித்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக தனது தந்தை உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

90 வயதாகும் ரிச்சர்ட் அட்டன்போரக், 60 ஆண்டுகளாக சினிமா உலகில் நடிகராகவும், டைரக்டராகவும் வலம் வந்துள்ளார். ஓ வாட் எ லவ்லி வார், சாப்லின், சடோலாண்ட்ஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் அட்டன்போரக். இவர் யூனிசெப் உள்ளிட்ட பல மனித நேய அமைப்புக்களின் தூதராகவும் இருந்துள்ளார்.