மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான படம் இரவும் பகலும். இப்போது அதே தலைப்பில் படம் இயக்கி வருகிறார் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் பாலஸ்ரீராம். குரு காணிக்கையாக ஏ.வெங்கடேஷை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, அனன்யா ஹீரோயின். ஜெகன் காமெடி செய்கிறார்.
"பகலில் என்ஜீனியரிங் படிக்கும் ஹீரோ இரவில் திருடனாக இருக்கிறார். அவர் திருடுவது எதற்காக அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது படத்தின் கதை. படத்தின் கதையை அனன்யாவிடம் சொன்னதும் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார்.