அகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமலா - நாகார்ஜுனா மகன் படம் ஆரம்பம்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இன்றும் இளமையுடன் இருக்கும் நாகார்ஜுனா, 90களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா ஆகியோரின் மகன் அகில் நடிகராக அறிமுகமாகும் தெலுங்குத் திரைப்படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. வி.வி. விநாயக் இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்குத்  திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் நிதினின் தந்தையான சுதாகர் ரெட்டி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

 முன்னணி வசனகர்த்தாவான கோனா வெங்கட் படத்திற்கு வசனம் எழுதுகிறார். தனது அறிமுகப் படம் குறித்து அகில் கூறியதாவது, “இனிமேலும் தாமதிக்காமல் எனது அறிமுகப்படத்தைப் பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். வி.வி.விநாயக்தான் படத்தின் இயக்குனர். தற்போதுதான் சம்பிராதயமான பூஜையை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருடன் முடித்தோம்.

நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகம்...!

1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார்.

அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் குழந்தையாக இருந்த போதே தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'சுட்டிக் குழந்தை' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது டீன் ஏஜ் வயதைக் கடந்துள்ள அகில், சமீபத்தில் 100 நாட்களைக் கடந்த 'மனம்' படத்தில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதுவே அவருக்கு பலத்த வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அகிலும் விரைவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதற்கான கதைகளை அகிலும், அவருடைய அப்பா நாகார்ஜுனாவும் கேட்டு வந்தார்கள்.