வெண்மேகம் படத்தில் அறிமுகமான இஷாரா. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறியப்பட்டார். தற்போது அவர் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் பெயர் ஷெல்பி. இஷராவுடன் மேலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
தற்போது கதம் கதம் படத்தை தயாரித்து வரும் அப்பு மூவீஸ் கார்த்திக் தயாரிக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். செல்பி என்பது இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை. அதோடு கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாட்டும் ஹிட்டானதால் டைட்டிலை அவரச அவரசமாக பதிவு செய்து விட்டார்கள். படத்தின் கதைக்கும் செல்பிக்கும் நெருக்கமான தொடர்பும் இருக்கிறதாம்.