மஞ்சுவாரியர் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சு வாரியர் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.இதற்காக ஜோதிகா டெல்லியில் முகாமிட்டு நடித்து வருகிறார்.
முதலில் கிளைமாக்ஸ் காட்சியை டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ் படமாக்கி வருகிறார். இதை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தப் படத்தில் புதிதாக அபிராமி இணைந்துள்ளார். ‘வானவில்’, ‘சமுத்திரம்’, ‘விருமாண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அபிராமி சிறிது காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது ஜோதிகா நடித்துவரும் இப்படத்தில் அபிராமி நடிக்கிறார். இதில் ஜோதிகாவிற்கு தோழியாக அவர் நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு தோழியாக கனிகா நடித்த கேரக்டரில் அபிராமி நடிக்க உள்ளார்.