தனுஷின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரிராஜா சமீபகாலமாக படங்கள் ஏதும் இயக்காமல் சைலண்ட் ஆக இருந்தார். காரணம் தனுஷ்! படங்கள் டைரக்ட் செய்தால் அனாவசியமாக டென்ஷன் ஏற்படும். உடம்பு கெட்டுப்போகும். எனவே வீட்டில் ரெஸ்ட் எடுங்கள். எந்தெந்த வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்று சொல்லுங்கள். நானே அனுப்பி வைக்கிறேன்... சுற்றிப்பார்த்துவிட்டு வாங்கள் என்று கஸ்தூரிராஜாவிடம் சொன்னாராம்.
மகன் சொன்ன அறிவுரையைத் தட்ட முடியாமல், படங்கள் இயக்குவதை மறந்து சில காலம் சும்மா இருந்தார் கஸ்தூரிராஜா. அப்பாவின் மாற்றத்தைக் கண்டு மகன் தனுஷும் சந்தோஷப்பட்டார். அவரது சந்தோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கஸ்தூரிராஜா.
சும்மா இருக்கப் பிடிக்காமல் படம் டைரக்ட் பண்ணப்போவதாக சொல்ல ஆரம்பித்திருப்பதோடு, அதற்கான ஆயத்த வேலைகளிலும் இறங்கிவிட்டார். முதல் கட்டமாக கதையை ரெடி பண்ணிய கஸ்தூரிராஜா, அந்த கதைக்கு ஜெய் பொருத்தமாக இருப்பார் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். அடுத்த ஸ்டெப்பாக, ஜெய்யின் செல்போன் நம்பரை வாங்கி அவரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். பல தடவை போன் செய்தும் ஜெய் அட்ண்ட் பண்ணவே இல்லையாம். பிறகு மெஸேஜ் அனுப்பி இருக்கிறார். அதற்கும் ஜெய்யிடமிருந்து பதில் இல்லை. இந்த விஷயம் தனுஷ் காதுக்குப்போக, தன் அப்பாவை அவமானப்படுத்திய ஜெய் மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.