கார்த்திக்கின் மகன் கௌதமை கடல் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தியபோது அவரைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகள் அணி வகுத்தன. அவற்றில் கௌதம் கார்த்திக் ஒப்புக்கொண்ட முதல் படம் - சிப்பாய்.
சிலம்பாட்டம் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிப்பாய் படத்திற்குப் பிறகு கௌதம் ஒப்புக்கொண்ட என்னமோ ஏதோ என்ற படம் கூட வெளியாகி மாதக்கணக்கில் ஆகி விட்டது. ஆனால் சிப்பாய் படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது.
என்ன விஷயம்? சிப்பாய் படத்தின் அனைத்து வேலைகளும் எப்போதோ முடிந்துவிட்டதாம். அப்புறம் படம் வெளி வருவதில் என்ன தடை? இப்படம் சட்டக்கல்லூரி மாணவர்கள் பற்றிய கதை அம்சம் கொண்டதாம். பல வருடங்களுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்களின் மோதல் சம்பவங்களின் பின்னணியில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் சரவணன். சிப்பாய் படம் ரிலீசாக இருந்த நேரத்தில் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் முந்திக்கொண்டு வெளியாகிவிட்டது. இந்தப்படமும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சம்பந்தமான கதை! இவன் வேற மாதிரி படத்தின் தோல்வி, அதேபோன்ற கதை அம்சம் கொண்ட சிப்பாய் படத்துக்கு வியாபாரரீதியில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் சிப்பாய் வெளியீடு தாமதமாகிவிட்டதாம். தற்போது சிப்பாய் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.