2014 எனக்கு சந்தோசமான வருடம்! -ப்ரியாஆனந்த்

எதிர்நீச்சலுக்கு பிறகு பேசப்படும் நடிகையான ப்ரியாஆனந்த், கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்தில் இதுவரை நடிக்காத வெயிட்டான ரோலில் நடித்தார். அதன்பிறகு வெயிட்டான கதைகள் தேடியபோதும் அவரை நம்பி வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் முன்வரவில்லை. அதனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்காக, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் கமிட்டானார்.

இதில், அரிமா நம்பி வெளியாகி ஹிட்டடித்து விட்டதால் உற்சாக மனநிலையில் இருக்கிறார் ப்ரியாஆனந்த். அதோடு, இரும்புக்குதிரை, வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என நான் நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த படங்கள் எல்லாமே வெற்றி பெறும் நிலையில்தான் உள்ளன. அந்த வகையில், நான் சினிமாவுக்கு நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் இந்த 2014ம் ஆண்டுதான் எனக்கு சிறப்பான வருடம் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், ஒரே வருடத்தில் 4 படங்கள் திரைக்கு வருவதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறேன் என்கிறார்.