மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளான். மயக்கமடைந்த அச்சிறுவனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவனது வீட்டில் அவனை பத்திரமாக சேர்த்துள்ளனர். மயக்கத்திலிருந்து விழித்து காலையில் எழுந்த சிறுவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
