நவநாகரிக யுகத்தில் பெண்கள் எல்லாம் அழகாக ஜொலிக்க ஆடை,நகை மற்றுமின்றி கைப்பையும் தேவை.அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம்.
