பாடசாலை காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடசாலை காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்லூரி நட்பின் பிரிவு

கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
பயமும் தயக்கமும், நிறைந்த மனது
கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என
நாம் நினைத்திருக்க மாட்டோம்.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருக‌ருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ வ‌ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.