இப்போதைய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் தோல் நோய். கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடம் உடை மாற்றி அணியும் போக்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் ஈரம் காயாமல் அணியக்கூடாது.
குளித்த பின் உடம்பை நன்கு துடைக்கவேண்டும்.
ஈரத்துடன் துணிகளை உடுத்தக்கூடாது. அதேபோல் ஒருவர் அணிந்த உடையை மற்றவர்கள் அணியக்கூடாது. இவ்வாறு செய்தால் தோலில் படர்தாமரை நோய் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். குறிப்பாக கால் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளாடைகள் சீல் வடிய ஆரம்பித்து விடும்.
இதனால் காயம் ஏற்பட்டு அந்த பகுதியே கருப்பாக மாறிவிடும். ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களாக இருந்தாலும் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
