ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கின்ற தலைப்பில்
கடந்த சில நாட்களாக “வாட்ஸ்அப்” பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
அந்த செய்தியை வழக்கமாக சமூகத்தின் நலனுக்காக ஷேர் செய்யப்படும் விழிப்புணர்வு செய்தி என்று நீங்கள் கடந்து விட முடியாது. காரணம் அது ஒவ்வொரு தனி மனிதனின் நேரடியான நலன் சார்ந்தது. குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.
பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தருகிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.
