கடவுச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுச்சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords

இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் yahoo நிறுவனம் அதன் கணக்கினை கொண்டிப்பவர்களின் பாதுகாப்புக் கருத்தி Demand Passwords எனும் முறைமையினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குறுஞ்செய்தி முறையில் அனுப்பி வைக்கும். இதனைப் பயன்படுத்தி கணக்கினுள் பாதுகாப்பாக நுழைய முடியும்.

உங்களுடைய "Password" பாதுகாப்பானதா..?

இன்றைய தொழிநுட்ப உலகில் "கடவுச்சொல்" என்பது மிகவும் முக்கியமானதல்லவா? நமது கணணி, மற்றும் Smart சாதனங்களில் உள்ள எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையயவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு, வெவ்வேறுபட்ட இணையதளங்களில் எமக்கென கணக்கொன்றினை உருவாக்கி கொள்வதற்கு, இணையத்தின் மூலம் வங்கி நடவடிக்கைகளை அல்லது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாம் கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

அவ்வாறு நாம் பயன்படுத்தும் கடவுச்சொல்லானது வலிமையாக அமைய ஆங்கில பெரிய எழுத்துக்கள், ஆங்கில சிறிய எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு ஆகக் குறைந்தது 8 எழுத்துக்களையாவது கொண்டமைதல் வேண்டும்.