நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. நோய் தொற்று என்பது அவரவர் உடல்நலம் மற்றும் சுற்றுசூழலை பொறுத்தது.
ஆயினும், ஏ பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தம் உள்ள நபர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது எனில், அதில் ஓ பிரிவினரைவிட ஏ பிரிவினருக்கு அந்த பிரச்சனை அல்லது நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படும்.
இது எங்கிருந்து எப்படி மூளையை கசக்கி மருத்துவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.
இவ்வாறு உங்கள் உடலுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் அல்லது சில நோய்களின் தாக்கம் உங்கள் இரத்த பிரிவை பொறுத்து எந்த அளவு உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
