அன்னமுன்னா பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னமுன்னா பழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முக்கிய மருந்தாகும் அன்னமுன்னா பழம்.

மிகவும் பயனுள்ளதும் சுவை உடையதுமான அன்னமுன்னா பழம்(Sour sop fruit ) பெரும் அளவு நமது நாடான நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது.இதை காட்டு ஆத்தா,அண்ணவண்ணா பழம்,ஆத்தச்சக்கா எனவும் கூறுவர். இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது.

பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.