மீண்டும் குழந்தை பருவத்திற்கு போன சின்மயி!

பிரபல பின்னணி பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ''ஒரு தெய்வம் தந்த பூவே...'' பாடலை பாடி தன் சினிமா கேரியரை தொடங்கியவர். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

பாடகியாக மட்டுமல்லாது முன்னணி நடிகைகள் பலருக்கும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் ராகுல் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சின்மயி தன் குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்தியுள்ளார். சமூகவலைதளமான டுவிட்டரில் இருக்கும் சின்மயி, 13வயதில் தான் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டோவை போஸ்ட் செய்துள்ளவர், சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியின் போது நான் பாடியது, 13 வயதில் நான் தானா இது என்று டுவிட் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் சின்மயிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாடகர் ஸ்ரீனிவாஸ் மூலம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.