தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா, லட்சுமிமேனன் போன்ற நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், ஹன்சிகாவின் மார்க்கெட் அடங்கிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறார்கள். அதை காரணம் காட்டியே அவரை புதிய படங்கள் விசயமாக புக் பண்ண வருவோர்கள் மிகக்குறைவான சம்பளத்திலேயே நடிக்குமாறு கேட்கிறார்களாம்.
அதைக்கேட்டு கொதித்துப்போய் இருக்குகிறார் ஹன்சிகா. காரணம், தற்போது தமிழில் வாலு, அரண்மனை படங்களை முடித்து விட்ட ஹன்சிகா, உயிரே உயிரே, ரோமியோ ஜுலியட், மீகாமன், ஆம்பள மற்றும் தெலுங்கில் பவர் போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, அவரது நடிப்பில் வெளியாக தயார் நிலையில் இருக்கும் அரண்மனை, வாலு படங்களில் இதுவரை நடிக்காத அளவுக்கு வெயிட் ரோலில் நடித்திருக்கிறார் ஹன்சிகா.
அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது தனக்கு பர்பாமென்ஸ் நடிகை என்கிற பெயர் கிடைக்கும். அதோடு தனது சம்பளமும் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளைப் போன்று கிடுகிடுவென்று உயரும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் புதிதாக தன்னை புக் பண்ண வருவோர், புது வரவு நடிகைகளைப் போன்று நினைத்து 50 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் தரவே முன் வருவதால், தற்போது தேடி வந்த சில படங்களை திருப்பி விட்டுள்ளார் ஹன்சிகா.
மேலும், விஜய், அஜீத், சூர்யா போன்ற மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பெயரளவில் பரபரப்பை கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஹன்சிகா.