சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன்தான் இப்போதைய நடிகர்கள் வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் விஜயசேதுபதி வித்தியாசமானவர்.
அவருக்கு பெரிதாக சினிமா கனவு கிடையாதாம். அந்த வகையில் நடிகர்கள் விமல், விதார்த் போன்றோர் கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக்கொண்டிருந்தபோது, இவர் ஒரு கணக்காளராகத்தான் அங்கு வேலையில் சேர்ந்தாராம்.
அப்போது ஒரு நண்பர் எடுத்த குறும் படத்துக்கு நடிக்க ஆள் தேவைப்பட விஜயசேதுபதியை கேட்டார்களாம். எனக்கு நடிப்பு வராதே என்று மறுத்தவரை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்களாம். ஆனால் அப்படி நடித்ததை பலரும் பெருமையாக பேசினார்களாம். விளைவு, அதிலிருந்து அவருக்குள் நடிப்பு ஆசை துளிர் விட, பல குறும் படங்களில் நடித்திருக்கிறார்.
அதன்பிறகுதான் சினிமாக்களில் சின்னச்சின்ன வேடங்கள் கிடைக்க நடிக்கத் தொடங்கிய விஜயசேதுபதி, பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவானார். அதையடுத்து, தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என ஹிட்டாக அமைய இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவைப்பொறுத்தவரை எனக்கு பக்கபலம் இல்லைதான். ஆனால் எனது நண்பர்கள் கைகொடுத்து வந்திருக்கிறார்கள். அதோடு என்னை நிறைய ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஊககம்தான் இப்போது என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்தவகையில், என்னை யாரும் கைதூக்கியெல்லாம் விட வேண்டாம். உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாலே போதும் நான் எத்தனை பெரிய உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் ஆற்றலை பெற்று விடுவேன் என்கிறார் விஜயசேதுபதி.

Cinema,actor vijay sethupathi