கரடி சிங்கமாகுமா?

யார் சிறத்த போலீஸ் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்…

விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்தகாடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்…யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி…முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில்ஒருசிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்…

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்.
ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்…அங்கே மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் “ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்”என்று அடி பின்னிகொண்டு இருந்தனர்,