ஸ்ருதி ஹாசன், ஒரு பாடகியாகத் தான், சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தார்.
'தேவர் மகன்' படத்தில், 'போற்றி பாடடி பெண்ணே' என்ற பாடலை, இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்தும்,பல மொழிகளிலும் பரவலாக பாடி வந்த அவர், இப்போதும் தமிழ், தெலுங்கு, இந்தி என, பிசியாக பாடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, இந்த மூன்று மொழிகளிலுமே ஸ்ருதி ஹாசன் சரளமாக பேசக்கூடியவர் என்பதால், அவரை
பாட வைப்பதிலும், இசையமைப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, விஜய் நடிக்கும், 'கத்தி' படத்திலும், ஒரு கலக்கலான பாடலை பாடவுள்ளாராம்.