சிறைச்சாலையில் புறம்போக்கு ஷூட்டிங்...


எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை படத்திற்கு பிறகு அவர் இயக்கி வரும் படம் புறம்போக்கு. இதன் பெரும்பகுதி காட்சிகள் சிறைச்சாலையில்தான் நடக்கிறது.

இதற்காக கடந்த மூன்று மாதமாக ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையில் 200 தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி சிறைச்சாலை செட்டை அமைத்துள்ளனர். இதற்காக 2 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சிறைச்சாலை அரங்கில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. தினமும் 600 துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக நடந்த படப்பிடிப்பில் ஆர்யா, ஷாம் தொடர்பான காட்சிகள் படமானது. அடுத்த வாரம் முதல் விஜய் சேதுபதி, கார்த்திகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு முடிந்துவிடும் ஈன தெரியவருகிறது.