அஞ்சலி சொன்ன பேய் ரகசியம்!!

தமிழில் சுராஜ் இயக்கத்தில், ஜெயம்ரவியுடன் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அவர் நடிக்கிறார். அதோடு, தெலுங்கில் உருவாகும் கீதாஞ்சலி என்ற படத்திலும் அஞ்சலிதான் நாயகி. கீதாஞ்சலி என்ற டைட்டீல் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறாராம். ஆனால், இதுவரை அவர் நடித்திராத அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட கதையில் அப்படம் உருவாகிறதாம்.

இதுபற்றி அஞ்சலி கூறும்போது, இந்த படத்தில் நான் பேயாக நடிக்கிறேன். அப்படி நடிப்பது முதல் அனுபவம் என்றாலும், நான் சின்ன வயதில் இருந்தபோது பேயை பார்த்திருக்கிறேன். இருட்டில் ஒரு உருவம் நடந்து செல்வது போன்று இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் நான் பார்க்கவில்லை.


அந்தவகையில் பேய் இருப்பதை நான் நம்புகிறேன். வாழ்க்கையில் நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் பேயாக வருவார்கள். அப்படி வருபவர்கள் தெய்வநம்பிக்கை உள்ளவர்களை நெருங்குவதில்லை என்று கூறும் அஞ்சலி, இந்த கீதாஞ்சலி படத்தில் நிறைய திக் திக் காட்சிகள் உள்ளது. இதுவரை என் அழகை ரசித்த ரசிகர்கள், முதன்முறையாக என்னை பேயாகப்பார்த்து அலறிக்கொண்டு ஓடப்போகிறார்கள் என்கிறார் அஞ்சலி.