திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார்.
தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். திரிஷா தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ மற்றும் மணிமாறன் டைரக்டு செய்யும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.
இதில் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’ படத்திலும் நடித்து முடிந்துள்ளார். இதுவும் விரைவில் ரிலீசாக உள்ளது.