கொசுக்கள் ஏன் எல்லோரையும் கடிக்காமல் சிலரை மட்டும் கடிக்கிறது?

சிலருக்கு கொசுக்கள் என்றால் காந்தம் போல. எப்போதும் அவர்களை நாடி வந்து கடிக்கும். ஆனால் சிலருக்கோ அது அப்படியே நேர் எதிர். ஏன் அது சிலரின் மீது மட்டும் இரத்தத்தை உறிஞ்சுகிறது? சிலர் சாயங்காலம் வெளியே வந்தாலும் கூட அவர்களை அவைகள் தொடுவது கூட அல்ல? இந்த அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு சரியான கலவையில் பார்வையையும் வாசனைகளையும் அளிப்பார்கள். ஒரு கூட்டத்தில் தமக்கான இலக்குகள் யார் யார் என்பதை, கொசுக்கள் தன் உணர்வுகளை கொண்டு கண்டுபிடித்து விடும்.

சரி, உத்திரவாதமாக உங்களை கொசு கடிப்பதற்கான 14 காரணங்களைப் பற்றி சற்று பார்க்கலாமா?

01. தொடர்ச்சியாக மூச்சு விடுதல்

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசுக்கள் சுலபமாக தெரிந்து கொள்ளும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக
மூச்சு விடுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களிடம் இருந்து இரத்தம் உறியப்படும். கார்பன் டை ஆக்சைடு இருந்தால் அருகிலேயே உயிருள்ள, சுவாசிக்கின்ற, இரத்தம் நிறைந்த மிருகம் அருகில் உள்ளது என்பதை அது தெரிந்து கொள்ளும். ஒரு முறை அது அதனை உணர்ந்து விட்டால், மூலத்தை அடையும் வரை, கார்பன் டை ஆக்சைடு வாயுவை பின்பற்றி பரந்த வண்ணம் இருக்கும்.

02. குளிப்பதை தவிர்ப்பது

எந்தளவுக்கு உங்களிடம் இருந்து நாற்றம் வருகிறதோ, கொசுக்களுக்கு உங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம். டியோடரண்ட்டை கை விடுங்கள், சோப்பு போடுவதை நிறுத்துங்கள், பிறகு என்ன கொசுக்களை அடிக்க துவங்குங்கள்.

03. நடப்பது அல்லது ஓடுவது

கொசுக்கள் தங்களின் பலி யார் என்பதை முதலில் தங்களின் பார்வையை வைத்து தீர்மானிக்கும், இரண்டாவதாக மனிதர்களின் அசைவை வைத்து தங்களின் குறியை தீர்மானிக்கும். வெளியே செல்லுங்கள், நடை கொடுங்கள், பூங்காக்களில் ஓடுங்கள், ஜாகிங் செல்லுங்கள், மேலேயும் கீழையும் குதித்து உடற்பயிற்சி செய்யுங்கள்! எப்படி தானாக கொசுக்கள் வந்து உங்களை கவ்வுகிறது என்பதை மட்டும் பாருங்கள்.

04. அதிகமாக வியர்த்தல்

வியர்ப்பது என்பது கொசுக்களை ஈர்க்கும் சிறப்பான கலவை ஆகும் – ஈரப்பதமும் வாசனையும். கொளுத்தும் கோடைக்காலத்தில், பகல் அல்லது சாயங்கால நேரம் வெளியே சென்று வியர்வை சிந்த வேலைப்பாருங்கள். கொசுக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றிகளை கூறும்.

05. வெதுவெதுப்புடன் இருப்பது

வெப்பத்தை தேடி அலையும் ஏவுகணைகளாக கொசுக்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவுக்கு வெப்பத்துடன் இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் உங்களை கண்டு கொள்ளும். தொலைவில் இருந்து அவைகளால் உங்கள் உடல் சூட்டை உணர முடியாமல் போனாலும் கூட, சில அடி தொலைவில் இருக்கும் போது உங்களின் வெப்பத்தை அவை எளிதாக உணரும்.



06. இருண்ட நிறத்தில் ஆடையணிவது

இருண்ட நிறங்களுக்கு, குறிப்பாக நீல நிறம் என்றால் கொசுக்கள் வேகமாக செயலாற்றும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளது. வேண்டுமெனில் பழுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை தூக்கி எறியுங்கள். மாறாக ஜீன்ஸ் மற்றும் கருப்பு டீ-ஷர்ட் அணியுங்கள். இப்போது கொசுக்களுக்கு நீங்கள் தான் சுலபமான இலக்காக மாறி விடுவீர்கள். நேராக உங்கள் மீது தான் தரையிறங்கும்.

07. பெர்ஃப்யூம் அல்லது வாசனை திரவியங்கள்

உங்கள் உடல் நாற்றத்தை உங்களால் பொறுக்க முடிவில்லை என்றால் கொசுக்களை ஈர்க்க எதிர்மறையான மற்றொரு விஷயத்தை செய்யலாம். அளவுக்கு அதிகமான பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள். குறிப்பாக மலர் வாசனைகள் என்றால் கொசுக்களை வேகமாக ஈர்க்கும்.

08. உங்கள் சருமத்தின் மீது ஆல்ஃபா ஹைட்ராக்ஸி பொருட்களை பயன்படுத்துதல்

நம் உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் லாக்டிக் அமிலம் கொசுக்களை வேகமாக ஈர்க்கும். பல சரும பராமரிப்பு பொருட்களில் லாக்டிக் அமிலமும் கலந்துள்ளது. இதனால் அவைகளை பயன்படுத்தும் போது உங்களுக்கும், இரத்தத்தை உரியும் கொசுக்களுக்குமான கெமிஸ்ரி சூப்பராக ஒத்துப்போகும். “ஆல்ஃபா ஹைட்ராக்ஸி” என பொருட்களின் லேபில் மீது இருந்தால், அது அதிகமான அளவு லாக்டிக் அமிலத்தை அளிக்கும்.

09. உங்கள் சாக்ஸை மாற்றாதீர்கள்

ஆம், அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலான விஷயம் இது. பொதுவாக பாதங்களின் வாசனை என்றால் கொசுக்களுக்கு பிடிக்கும். பூச்சியியல் வல்லுநர் டேனியல் எல்.க்ளைன், கொசுக்களை கவர்வதற்காக ஒரு அழுக்கு சாக்ஸ் ஒன்றை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார். 3 நாட்கள் பழமையான அந்த சாக்ஸை கொசுக்களால் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, மனித பாதங்களில் உருவாகும் பாக்டீரியாக்களினால் பெருமளவு கொசுக்கள் மொய்க்கக்கூடும்.

10. பீர் குடித்து சீஸ் உண்ணுங்கள்

ஒரு ஹோட்டலில் பீர் குடிப்பவர்களை தான் கொசுக்கள் அதிகமாக குறி வைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீஸ் கலந்து செய்யப்பட நொறுக்குத் தீனிகளுடன் பீர் குடித்து மகிழும் போது, தாக்குதலுக்கு நீங்களே தயாராகி கொண்டிருக்கிறீர்கள். லிம்பர்கர் சீஸ் என்பது உங்கள் மீது நாற்றத்தை உண்டாக்கும் அதே பாக்டீரியாவை கொண்டு செய்வதாகும்.