மீண்டும் நடிக்க வருகிறார் சங்கீதா

மலையாள நடிகையான சங்கீதா வாழ்ந்து காட்டுவோம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இப்போது மாஜி ஹீரோயின்கள் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீசன். குறிப்பாக மலையாளத்தில் மஞ்சு வாரியாரின் ரீ-என்ட்ரிக்கு பிறகு வீட்டில் சும்மா இருக்கும் மாஜி ஹீரோயின்கள் கண்ணாடி முன்னால் நின்ற அழகு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் சங்கீதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.


1998ம் ஆண்டு சங்கீதா சீனிவாசனுடன் நடித்த படம் சிந்தாவிஷ்டாய சியாமளா. இதில் சங்கீதாவுக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. தற்போது அதன் இரண்டாவது பாகமாக சீனிவாசன் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கு சங்கீதாவை நடிக்க கேட்டதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நடிப்பது பற்றி இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்ற சங்கீதா தரப்பு கூறுகிறது, என்றாலும் நடிப்பது உறுதி என்கிறார்கள்.