இயற்கையான
பொருட்களை கொண்டு மிக எளிதாக வீட்டை சுத்தம் பண்ணலாம். இயற்கையான பொருட்களை வைத்து
செய்வதால் அனைத்து பொருட்களும் பளிச்சென்று இருப்பதுடன், நறுமணமத்துடனும் இருக்கும்.
* சில்வர்
பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.
* துருப்பிடித்த
இரும்பு பொருட்களில், உருளைக்கிழங்கை
கொண்டு தேய்தாலே விரைவில் போய்விடும்.
* வாணலியில் உள்ள
கருமையை போக்க காபி தூளை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
* ஜன்னலில் உள்ள
எண்ணெய் பசை போன்ற தூசிகள் மற்றும் கறைகள் போவதற்கு வெங்காயத்தை கொண்டு தேய்க்க
வேண்டும்.
* பாத்திரம்
கழுவும் தொட்டியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பளிச்சென்று இருக்க எலுமிச்சையைக் கொண்டு
தேய்க்க வேண்டும்.
* காப்பர்
பொருட்கள் புதிது போன்று காணப்பட வேண்டுமானால், தக்காளியைக் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
* வீட்டில் பூச்சிகள்
வரும் இடத்தில் பிரியாணி இலையை வைத்தால் பூச்சிகள் வராது.