மாரீசனுக்காக விஜய் ஹன்சிகா நடனம்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்தின் படபிடிப்பு தொடங்கி விட்டது. முதல் கட்டமாக சில மாதங்களுக்கு முன்பே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சியை படமக்கியிள்ளனர்.

நூற்றுக்கணக்கான அழகிகள் அணிவகுத்து இந்த பாடல் காட்சியில் விஜய்யும், ஹன்ஷிகாவும் அழகு மிளிர நடமாடியிருக்கின்றார்கள். சரித்திர பின்னணி கொண்ட இந்த கதைக்கான இளவரசி கெட்டப்பில் உடையணிந்து ஜோலித்தாரம் ஹன்சிகா.
அதேசமயம் விஜய், அரசர் கெட்டப் போடாமல், ஹோலிவுட் படங்களில் வரும் ஹீரோக்களைப் போன்ற கெட்டப்பில் உடையணிந்து நடனமாடியிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான அந்த பாடல் வீரபாண்டி கொட்டயிலேயே என்று தொடங்குகிறதாம். இந்த பாடல் படமாக்க்ப்பட்டதையடுத்து, தொடர்ச்சியாக அதே செட்டில் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்ச்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட உள்ளதாம். அதில் விஜய், ஹன்ஷிகா மட்டுமின்றி ஸ்ருதிஹாசன். ஸ்ரீதேவி, சுதீப் உள்பட அனைத்து நடிகர்களுமே கலந்து கொள்கிறார்களாம்.