வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்து விக்ரம் கே. குமாரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மாஸில் நயன்தாரா, எமி ஜக்சன், ப்ரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் விக்ரம் கே. குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.
இவர் சிம்பு நடித்த அலை, மாதவன் நடித்த யாவரும் நலம், தெலுங்கில் மனம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்திற்கு '24" என்ற பெயரை வைக்கலாமா என்று பரீசீலித்து வருகின்றனர்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். விக்ரம் கே.குமார் இப்படத்திற்கான வேலைகளில் படு பிசியாக உள்ளார். மாஸ் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான ஷ_ட்டிங் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.