காரம் உப்பு இல்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ, அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால்தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு பொருள்... என்பதே அனைவரினதும் கூற்றாகும். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, சிறிது சீரகம் மிளகு, , பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும்.
வெறும் புளித்தண்ணீர்தான்... ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் கூட்டு, சாம்பார், வத்தக் குழம்பு என பெரும்பாலான உணவுகளுக்கு புளி சேர்த்தால்தான் வரும் ருசியோ தனிதான். தென்னிந்தியச் சமையலைப் பொறுத்த வரை புளிப்புச் சுவைக்கு புளிக்குத்தான் முதலிடம். மாங்காய், எலுமிச்சை எல்லாம் இரண்டாம் இடம் தான்.
புளியில் கொஞ்சம் கெட்ட விஷயங்களும் நிறைய நல்ல அம்சங்களும், உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக லேகியம் உள்ளிட்ட அவர்களது மருந்துத் தயாரிப்புகளில் புளி சேர்ப்பார்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாது. வயிறு சம்பந்தப்பட்ட மருந்துகளுக்கும் புளி சேர்ப்பதுண்டு. மலச்சிக்கலுக்கும் இது நல்ல மருந்து.
புளியங்கொட்டைக்கும் மருத்துவக் குணம் உண்டு. கண்களுக்கான டிராப்ஸ் தயாரிப்பில் புளியங்கொட்டை பயன்படுத்தப்படுகிறதாம். புளிய இலையின் துளிர்களைக் கொதிக்க வைத்துச் செய்கிற கஷாயம், மலேரியா நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஜலதோஷம், தொண்டைக் கமறல்இருக்கும் போது, ரசம் சாப்பிடச் சொல்வார்கள். நீர்த்த புளிக்கரைசலுடன், சீரகம்,மிளகும் சேர்ந்து, தொண்டைக் கமறலை குணப்படுத்தும். காய்ச்சல், மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு புளி சேர்த்த உணவு கொடுப்பதன் பின்னணியும் இதுதான்.
புளி மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட். ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியது. வெளிப்பூச்சுக்கும் புளி நல்ல மருந்து. அந்தக் காலங்களில் ரத்தக் கட்டுக்கு புளிப்பற்று போடுவார்கள். வீக்கம், தலைவலி, தோல்புண் போன்றவற்றுக்கும் புளியைத் தடவினால் நிவாரணம் தரும். இத்தனை நல்ல குணங்கள் உள்ள புளியை ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்கு மேல் எடுக்கக் கூடாது. அந்த அளவு தாண்டினால், பேதி ஏற்படும்.
யாருக்கெல்லாம் புளி கூடாது?
இதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு புளி கூடாது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் புளி வேண்டாம். அது அவர்களது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களும் புளி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள். நீரிழிவு நோயாளிகளும் புளியை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அது குளூக்கோஸின் அளவை குறைத்து விடும். ரத்தத்தை சுண்டும் குணம் கொண்டது புளி என்பதால் எல்லோருமே அளவோடு அதை உபயோகிப்பதே பாதுகாப்பானது
என்ன இருக்கிறது? 200 கிராம் புளி விழுதில்
கொழுப்பு 0.2 கிராம்
புரதம் 6.2 கிராம்
கலோரி 566 கிலோ கலோரி
இரும்பு 34 மி.கி.
நார்ச்சத்து 11.2 கிராம்
கால்சியம் 340 மி.கி.