ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' படத்தில் நாயகியாக நடித்தவர் தேஜஸ்வி. கடந்த வாரம் வெளிவந்த 'ஐஸ் க்ரீம்' படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் தேஜஸ்வி நடித்திருக்கிறார் என பட வெளியீட்டிற்கு முன் வெளியான பரபரப்பான செய்தியால் தேஜஸ்வி திடீர் புகழைப் பெற்றார்.
மீடியாக்கள் அவரைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு எழுதின. அந்த காட்சி பற்றி தேஜஸ்வியும் உண்மையைச் சொல்லாமல் பேட்டி அளித்தார். ஆனால், படம் வெளிவந்த பின் பார்த்தால் அப்படிப்பட்ட காட்சி எதுவுமே படத்தில் இல்லாதது தெரிய வந்தது. இது அனைத்தும் திட்டமிட்ட பப்ளிசிட்டி ஸ்டன்ட் என ரசிகர்கள் ராம் கோபால் வர்மா மீது கோமடைந்தனர்.
ஆனாலும், தேஜஸ்விக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்து விட்டது. இதையடுத்து ஒரு சில தெலுங்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வேறு ஒரு படத்திலும் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. ஆக, ஆந்திர ஐஸ் க்ரீம் உருகி தமிழ்நாட்டிற்கும் வருகிறது.