என்னை அறிந்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னை அறிந்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்னை அறிந்தால் படம் வெளியீடு தள்ளி போடப்பட்டது.

அஜீத் ரசிகர்களுக்கு, இந்த புத்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. அதாவது, (ஜனவரி 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகி, அஜீத் ரசிகர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரும் வேளையில் பொங்கலுக்கு, என்னை அறிந்தால் படம் வெளிவராது என்ற தகவலை சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

  முதன்முறையாக அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் மாஸ் வரவேற்பு கிடைத்தது.

என்னை அறிந்தால் டிரைலர்

அஜீத் படத்திற்கு பாட்டு பாடிய கானா பாலா

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் அஜீத்தின் அறிமுகப் பாடலான ‘அதாறு அதாறு, உதாறு உதாறு...’ எனத் தொடங்கும் பாடலை கானா பாலா பாடியுள்ளார்.

இதுவரை பல நடிகர்களுக்கு பாட்டு பாடியுள்ள கானா பாலா, அஜீத் படத்திற்கு பாட்டு பாடியதில்லை. ஒவ்வொரு பாடகருக்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் பாட்டு பாடுவது கனவாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.

திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: படப்பிடிப்புகளை ரத்து செய்தார்

திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். திரிஷா கடந்த சில நாட்களாக பிசியாக நடித்து வந்தார். இரவு பகல் படப்பிடிப்புகள் நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. டாக்டரை சந்தித்து காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டார்.

தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். திரிஷா தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ மற்றும் மணிமாறன் டைரக்டு செய்யும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.

'என்னை அறிந்தால்' பொங்கல் ரிலீஸ்...?

அஜித் - கௌதம் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு ஒரு வழியாக நேற்று தலைப்பை அறிவித்தாயிற்று. படத்தின் முதல் பார்வையும் நேற்று வெளியாகிவிட்டது. இரண்டுமே வித்தியாசமாகவும், அஜித்தை வேறு பரிமாணத்தில் காட்டும் படமாகவும் இந்தப் படம் இருக்கும் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அடுத்து படத்தின் இசை வெளியீடு எப்போது, படம் எப்போது வெளிவரும் என்ற பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது. படத்தின் இசை வெளியீடு நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத் துவக்கத்திலோ வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம். படப்பிடிப்பு முற்றிலுமாக டிசம்பர் மத்தியில்தான் முடியப் போகிறதாம். அதே சமயம் படத்தொகுப்பு, மற்ற சில வேலைகள் ஆகியவற்றை இப்போதே ஆரம்பித்து விட்டார்களாம்.

அஜித்தின் 55வது பட டைட்டில் என்னை அறிந்தால்...

ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று நேற்று வரை விவாதிக்கப்பபட்டு வந்தது. ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அந்த விவாதங்கள் அப்படியே என்னை அறிந்தால் படத்திற்கு திரும்பிவிட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ம் தேதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.