என்னை அறிந்தால் படம் வெளியீடு தள்ளி போடப்பட்டது.

அஜீத் ரசிகர்களுக்கு, இந்த புத்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. அதாவது, (ஜனவரி 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகி, அஜீத் ரசிகர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரும் வேளையில் பொங்கலுக்கு, என்னை அறிந்தால் படம் வெளிவராது என்ற தகவலை சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

  முதன்முறையாக அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் மாஸ் வரவேற்பு கிடைத்தது.


இந்நிலையில் இன்று(ஜன 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் மொத்த பாடல்களும், படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. பாடல்கள் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஜீத் ரசிர்கள் இந்த புத்தாண்டை டபுள் சந்தோஷமாக கொண்டாடினர். இப்படம் பொங்லுக்கு வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த போதிலும், போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் படத்தை ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரேநாளில் என்னை அறிந்தால் படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பொங்கல் ரேஸில் விக்ரமின் ஐ, அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை என ஐந்து படங்கள் போட்டி போட்டன, ஆனால் இப்போது, , ஆம்பள மற்றும் கொம்பன் படங்கள் மட்டுமே ரேஸில் உள்ளன.