இனிய பாடசாலை நினைவுகள்.

பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
நெஞ்சத்தில் எண்ணத்தில்
எண்ணற்ற பாரங்கள்

எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் மகிழ்ந்தது !
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு!

மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்

கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்

சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கள்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!