அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் 6 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் அஜீத்தின் அறிமுகப் பாடலான ‘அதாறு அதாறு, உதாறு உதாறு...’ எனத் தொடங்கும் பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
இதுவரை பல நடிகர்களுக்கு பாட்டு பாடியுள்ள கானா பாலா, அஜீத் படத்திற்கு பாட்டு பாடியதில்லை. ஒவ்வொரு பாடகருக்கும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் பாட்டு பாடுவது கனவாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.
அந்த வகையில் கானா பாலாவிற்கு அஜீத் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.பல பாடகர்கள் அஜீத் படத்திற்கு பாட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் வேளையில் மிகவும் குறுகிய காலத்தில் கானா பாலாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். இந்தப் பாடலை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் எழுதியுள்ளார். கானா பாலாவுடன் இணைந்து இப்பாடலை விஜய் பிரகாசும் பாடியுள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துவரும் ‘வை ராஜா வை’ படத்திலும் கானா பாலா பாடியுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த வருடத்தில் மட்டும் கானா பாலா குரலில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் அஜீத் படத்தின் பாடலும் வரவேற்பு பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.