ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பான கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போது சமந்தாவுக்கு எதிரியாகி விட்டார்.

அதோடு சமந்தா எந்த கருத்து சொன்னாலும அதற்கு எதிர் கருத்து கொடுப்பதை மகேஷ்பாபுவின் ரசிகர்கள முக்கிய வேலையாகவும் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், மகேஷ்பாபுவிடம் சமந்தாவின் இடம் காலியாகவே இருப்பதாக கருதிய, தமன்னா, காஜல்அகர்வால் போன்ற நடிகைகள் அந்த இடத்தை கைப்பற்ற முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் காஜல், ராம்சரணின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் மகேஷபாபு, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட நடிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் திரைமறைவு முயற்சிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், த்றபோது ஆகடு படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு அடுத்து ஒரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்த படத்தை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்று மேற்படி நடிகைகள் உள்பட மேலும் சில நடிகைகளும் கோதாவில் குதித்துள்ளார்களாம். ஆனால, கடைசி நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசனுககு கொடுக்குமாறு மகேஷ்பாபுவே அப்பட டைரக்டரிடம் கூறிவிட்டாராம்.

அதுமட்டுமின்றி, ஸ்ருதிஹாசன் நடித்தால் அந்த படத்தை தமிழ், இந்திக்கும் டப் செய்யலாம் அவரது சம்பளத்தையும் உயர்த்தி விட்டுள்ளாராம் மகேஷ்பாபு. இதனால் ஆந்திராவின் முன்னணி ஹீரோயினிகள் அனைவருமே பலத்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.