ரஜினி, கமலுக்குப்பிறகு அடுத்த போட்டியாளர்கள் யார் என்றால் அது அஜீத்-விஜய் இருவரும்தான். எப்படி ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்-அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
அதனால்தான் தங்களது ரசிகர்கள் மோதிக்கொள்ளும்போது, தாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக சில செய்திகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூர்யா மட்டும்தான் தற்போது போட்டியே இல்லாத களத்தில் கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறார். இவரை யாரும் போட்டியாக நினைப்பதில்லை. இவரும் யாரையும் போட்டியாளர்களாக கருதுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்துக்கொண்டிருககிறார்.
இதுபற்றி சூர்யா வெளியிட்டுள்ள செய்தியில், எந்த தொழிலாக இருந்தாலும் அதில் போட்டி அவசியம்தான். ஆனால் என்னைப்பொறுத்தவரை எனக்கு யாரும் போட்டி இருப்பதாக கருதவில்லை. மேலும், அஜீத், விஜய் இருவருமே என்னை விட சீனியர்கள், அனுபவசாலிகள், இந்த சினிமாவில் 25 வருடங்களாக உழைத்துக்கொண்டிருப்பவர்கள். அதனால் என்னை அவர்களுடன் ஒப்பிடுவதைகூட நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.