வாழ்க்கைக்கு சில அறிவுரைகள்.

* மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -    லாவோட் ஸே

* உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.

* கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

* நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

* கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்
* திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

* பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

* பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

* அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

* அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

* நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்

* துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்

* கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

* எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

* அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

* ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்

* எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்

* நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

* அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

* அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்21. நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

* பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல. அது ஆன்மாவின் ஏக்கமாகும்.

* நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் - ஆப்ரகாம் லிங்கன்

* முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். -பாரசீகம்

* தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது -ஹென்றி போர்டு

* எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். -இங்கிலாந்து.

* உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன். -யேசுநாதர்.

* ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் குதிரையை பின்னால் இருந்தும் முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்கக் கூடாது

* எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.

* எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

* அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

* நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌கிடைத்தே தீரும்.


* வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.