சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்பூரி, மராத்தி திரைப்படத்துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் வீரர்களாக களம் இறங்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி முதல் வருடம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அடுத்தடுத்த வருடங்களில் மக்களின் கவனம் இந்த சிசிஎல் மீது திரும்பியது. தனியார் சேனல்கள் பல இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய முன் வந்தன.
எனவே ஏகப்பட்ட விளம்பரதாரர்கள் குவிய ஆரம்பித்தனர். லாபம் தரக்கூடிய விளையாட்டுப்போட்டியாக மாறிவிட்ட இந்த சிசிஎல் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணிக்கு சென்னை ரினோஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அணிக்கு விஷால் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இரண்டுமுறை சாம்பியனாகவும் ஆகி இருக்கிறது சென்னை ரினோஸ்.
விஷ்ணு, விக்ராந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினாலும், விஷாலின் கேப்டன்ஷிப் காரணமாகவும் சிசிஎல் போட்டியில் சென்னை ரினோஸ் சிறந்து விளங்கி வருகிறது. சிசிஎல்லின் சீசன் 6 போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சென்னை ரினோஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார் விஷால். தனக்கு பதில் ஜீவாவை கேப்டனாக்கும்படி சென்னை ரினோஸ் அணியின் உரிமையாளரிடம் விஷால் சிபாரிசு செய்திருக்கிறார். ஜீவாவை கேப்டனாக்குவது சென்னை ரினோஸ் அணியின் முதுகெலும்பாக விளங்கும் விஷ்ணு, விக்ராந்த் ஆகியோருக்கு விருப்பமில்லையாம்.