"இது நம்ம ஆளு"செப்டம்பரில் ரிலீசாகிறது.

சிம்பு - நயன்தாரா நடிக்கும், 'இது நம்ம ஆளு' படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளர் என்ற நிலையில் அவர் கூறியதாவது: சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், மோனிஷா என் மோனலிஷா, காதல் அழிவதில்லை, வீராசாமி படங்களை தயாரித்தேன். தற்போது நான் ஹீரோவாக நடிக்கும் ஒரு தலை காதல் படத்தையும் என் மகன் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தையும் தயாரித்து வருகிறேன்.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் எனது இளைய மகன் குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறான். இந்த கால இளைஞர்களின் பல்சை புரிந்து கொண்டு பாட்டு போட்டிருக்கிறான். பாடல்கள் அனைத்தும் சூப்பராக வந்திருக்கிறது. 75 சதகிவித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. சிம்பு, நயன்தாரா தவிர இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.

அவரது போர்ஷன் மட்டுமே பாக்கி இருக்கிறது. படத்தின் கதை என்ன? அந்த இன்னொரு ஹீரோயின் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை இயக்குனர் பாண்டிராஜிடம்தான் கேட்க வேண்டும். படம் செப்படம்பர் மாதம் ரிலீசாகிறது என்பதை மட்டும்தான் தயாரிப்பாளர் என்ற முறையில் என்னால் சொல்ல முடியும். என்கிறார் டி.ராஜேந்திரன்.