தல அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. அதை நிரூபிக்கும் வகையில், அஜீத் நடிக்கும் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடும் ரசிகராக இன்றுவரை இருந்து வருகிறார். அதோடு, பேட்டிகளிலும் தன்னை கவர்ந்த ஒரே நடிகர் அஜீத் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டு வரும், சிம்புவுக்கு அஜீத்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவு. அது கெளதம்மேனன் இயக்கும் ஒரு படத்தில் கைகூடுவதாக இருந்தது. ஆனால், என்ன நினைத்தாரோ, அஜீத்தின் 55வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அந்த பட முயற்சியையே கிடப்பில் போட்டு விட்டார் கெளதம்.
ஆனபோதும், போனது போகட்டும் இப்போது தல நடிக்கும் படத்திலாவது எனக்கு ஒரு என்ட்ரி கொடுங்கள் என்று கேட்டாராம் சிம்பு. இந்த செய்தி அஜீத்தின் காதுகளுக்கு சென்றபோது, என்னுடன் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் ரொம்ப நாள் ஆசையாக உள்ளது. அதனால் இந்த படத்தில் அதை நிறைவேற்றி வைப்போம் என்று கெளதமிடம் சொன்னாராம். அதையடுத்து, அவருக்கேற்ற கேரக்டர் படத்தில் இல்லை. அதனால் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைக்கலாம் என்று கெளதம்மேனன் சொன்னாராம்.
அந்த யோசனை அஜீத்துக்கும் சரியாக பட, சிம்புவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார் கெளதம்மேனன். ஆக, கூடிய சீக்கிரமே தலயுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட தயாராகிக்கொண்டிருக்கிறார் தல ரசிகர் சிம்பு.