வித்தகன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதற்கு முழுக்குப்போட்டு விட்டார் பார்த்திபன். அதனால் மற்ற நடிகர்களின் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வரும் அவர், தற்போது ''கதை திரைக்கதை வசனம் இயக்கம்'' என்ற படத்தில் இயக்குனராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். அதோடு, தனது பெயரையும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் மாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கி வெற்றி பெறுவேன் என்று உரக்க பேசினார். ஆனால், கமர்சியல் விசயத்தில் சிக்கிக்கொள்வோம் என்று பின்னர் நினைத்தவர் திடீரென்று தம்பி ராமைய்யாவை ஒரு இயக்குனர் வேடத்துக்கு புக் பண்ணியவர், அடுத்தடுத்த பிரகாஷ்ராஜ், விஷால், விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்.
இவர்களெல்லாம் கதைப்படி நடிகர்களாக, இயக்குனர்களாக மட்டுமே வந்து விட்டு செல்கிறார்களாம். அப்படி நடித்த இவர்கள் யாருமே பார்த்திபனிடம் பணம் வாங்கவில்லையாம். ஒரு பெரிய இயக்குனர் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நட்புக்கான வேடத்தில் பணமே வாங்காமல் நட்புக்காகவே நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். ஆக, மனித நேய மன்றம் வைத்திருக்கும் தனக்கே இவர்களெல்லாம் மனிதநேயம் பற்றி உணர்த்தி விட்டார்களே என்று நெகிழ்ந்து போயிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.