தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நயன்தாராவுக்கென ஒரு தனி இடம் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்குப் பிறகு மறுபிரவேசம் செய்தபோது, மீண்டும் விட்ட இடத்தை நயன்தாராவினால் பிடிக்க முடியாது என்றுதான் கருதப்பட்டது. ஆனபோதும், மீண்டும் அதே பழைய எனர்ஜியுடன் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, பழைய இடத்தை பிடித்துக்கொண்டார்.
குறிப்பாக, ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி செம ஸ்பீடாக சென்று கொண்டிருக்கும் நயன்தாராவின் படக்கூலி இப்போது ஒன்றரை கோடியை தொட்டு நிற்கிறது. ஆனால், நடித்து வரும் படங்களில் ஒன்றிரண்டு சூப்பர் ஹிட் ஆனால் அதை அபபடியே இரண்டு கோடியாக ரவுண்டாக்கி விடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.
இந்த சேதி சினிமா வட்டாரங்களில் பரவியதை அடுத்து, மார்க்கெட்டில் இருக்கும் தமன்னா, காஜல்அகர்வால், சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். அதோடு, அவருக்கு மட்டுமே கேடகிற சம்பளத்தை மறுபேச்சில்லாமல் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், நாம் கேட்டால் மட்டும் மக்கர் பண்ணுகிறார்களே என்ன காரணம் என்பது புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.