50 லட்சம் சம்பளம் கேட்கும் ஸ்ரேயா!

உனக்கு 20 எனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்தவர் ஸ்ரேயா, அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி என மெகா படங்களாக நடித்தார். ஆனால், பின்னர் படவாய்ப்பு இல்லாமல் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாடி தனது மார்க்கெட்டை கவிழ்த்துக்கொண்டார் ஸ்ரேயா.

அதனால் பின்னர் எந்த படமும் இல்லாமல் தெலுங்கு, இந்தியில் நடித்து வந்த ஸ்ரேயாவின் நடிப்பில் சமீபத்தில் என் பெயர் பவித்ரா என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ரிலீசானது. ஆனால், தெலுங்கில் ஏற்கனவே நாகார்ஜூனாவுடன் மனம் என்ற படத்தில் நடித்து வெற்றிப்பட நடிகையாக இருந்ததால் தெலுங்கில் மட்டும் பவித்ரா படம் வெற்றி பெற்றது.


அதனால், தற்போது இரண்டு புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறாராம்.அதோடு, என் பெயர் பவித்ரா படத்தில் லீடு ரோலில் நடித்த ஸ்ரேயா, 40 நாட்கள் கால்சீட் கொடுத்தவர், 40 லட்சம்தான் சம்பளம வாங்கியிருந்தாராம். ஆனால், இப்போது 50 லட்சமாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். ஆனபோதும், படுகவர்ச்சியாக நடிக்க ஸ்ரேயா டபுள் ஓகே சொல்லியிருப்பதால் அவர் கேட்ட சம்பளத்தைக்கொடுத்து கமிட் பண்ணியுள்ளார்களாம் தெலுங்கு படஅதிபர்கள்.