இப்போதைய படங்களில் கதை இல்லை: சத்யராஜ்

சிபி, அருந்ததி நடிக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’ இப்படத்தில் ஒரு நாயும் முக்கிய கேரக்டரில் வருகிறது. நாதாம்பாள் பிலிம் சார்பில் சத்யராஜ் தயாரிக்கிறார்.

நாய்கள் ஜாக்கிரதை படம் குறித்து சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் எல்லாமே ஜெயித்து இருக்கின்றன. இந்த படத்தின் கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது. ஒரு நாயும் படம் முழுக்க முக்கிய கேரக்டரில் வருகிறது.பெங்களூருரில் அந்த நாய்க்கு விசேஷ பயிற்சி அளித்து நடிக்க வைக்கப்பட்டு உள்ளது.நான் தெலுங்கு, இந்தி உள்பட வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்ததால் தயாரிக்க முடிவு செய்தேன்.


பாச மலர் படம் வெளியான காலத்தில் படங்களில் 90 சதவீதம் கதையும் 10 சதவீதம் மேக்சிங் மற்றும் டெக்னிக் இருந்தது. என் காலத்தில் இரண்டும் சரிபாதியாக இருந்தது.ஆனால் இப்போது 25 சதவீதம் தான் கதை இருக்கிறது. 75 சதவீதம் மேக்சிங் மற்றும் டெக்னிக்குகள் உள்ளன.
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

சிபிராஜ் கூறும்போது, படம் சிறப்பாக வந்துள்ளது என்றார். இசையமைப்பாளர் தரண், பாடல் ஆசிரியர் மதன் கார்த்தி ஆகியோரும் பேசினர்.