லிங்கா பட ரிலீசிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சொனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தின் படபிடிப்புக்கள் முடிவடைந்து, தற்போது ரிலீசிட்கான விலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் ஆடியோவை நவம்பர் 16ம் தேதி வெளியிட உள்ளதாகவும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 21ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ஈரோஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாகும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் லிங்கா படத்தை வெளியிடுவதற்கு எதிராக இன்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ரவி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், லிங்கா படத்தின் கதை, 2013ம் ஆண்டு தான் தயாரித்து வெளிவந்த முல்லை வனம் 999 என்ற படத்தின் கதையை போலவே உள்ளதாக இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.