யமலிங்கமான சுமார் மூஞ்சி குமாரு!

விஜயசேதுபதி என்றாலே வித்தியாசம் என்றாகி விட்டது. வழக்கமான ஹீரோயிசம கொண்ட கதைகளில் நடிக்காமல் தனக்கென ஒரு பாணியில் நடித்து வருகிறார். தனது படத்தில் மற்ற ஹீரோக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்.

சில படங்களில் மற்ற நடிகர்கள் ஹீரோவாக நடிக்க தான் ஒரு கேரக்டரில்கூட நடிக்கிறார். அதைப்பார்த்து இப்படி நடிப்பதற்கெல்லாம் ஒரு கட்ஸ் வேண்டும் என்கிறார்கள். இந்த நிலையில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, ஷாமுடன் இணைந்து நடிக்கும் புறம்போக்கு படத்தில், யமலிங்கம் என்றொரு கேரக்டரில் நடிக்கிறார் விஜயசேதுபதி. சாதாரணமாக நம்ம ஊர் ஹீரோக்கள் ராஜா, கார்த்திக் என்று பெயர் கொண்ட கேரக்டர்களில்தான் நடிப்பார்கள். ஆனால் இவரோ யமலிங்கம் என்ற வில்லனின் கேரக்டரின் பெயரில் நடிக்கிறார்.


அதனால் இப்போது இந்த பெயரைப்பற்றிதான் கோடம்பாக்கத்திலுள்ள நடிகர்களும், டைரக்டர்களும் பேசிக்கொள்கிறார்கள். அதோடு இதுவரை விஜயசேதுபதியை இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இருந்து அவரை சுமார் மூஞ்சி குமார் என்று அழைத்து வந்தவர்கள், இப்போது யமலிங்கம் என்றுதான் அழைக்கிறார்களாம். அவர் அலுவலகத்துக்கு போன் போடுபவர்கள்கூட யமலிங்கம் இருக்கிறாரா? என்றுதான் கேட்கிறார்களாம். அந்த அளவுக்கு அந்த பெயர் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பிரபலமாகிக் கொண்டு வருகிறது.