கும்கி, இவன் வேற மாதிரி படங்களில் நடித்த விக்ரம்பிரபு, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களுக்கு பிறகு ஆக்சன் ஹீரோவாகி விட்டார். அதனால் இதுவரை விக்ரம்பிரபு எந்த மாதிரி நடிகர், எந்த மாதிரி கதைகளுக்கு பயன்படுத்துவது என்பதை ஜட்ஜ் பண்ண முடியாமல் இருந்த இயக்குனர்கள் இப்போது அவருக்கு ஆக்சன் கதைகளாக ரெடி பண்ணத் தொடங்கி விட்டனர்.
முக்கியமாக, சிக்ரம் தொடு படத்தில் விக்ரம்பிரபுவின் போலீஸ் கெட்டப்பை அஜீத் உள்ளிட்ட பிரபலங்களே பாராட்டியதால் அவரது கிரேடு இன்னும் உயர்ந்து நிற்கிறது. இந்த நிலையில், எழில் இயக்கத்தில் வெள்ளைக்கார துரை என்ற படத்தில் தற்போது நடித்து முடித்து விட்ட விக்ரம் பிரபு, அப்படத்தில் முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.
அதையடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு இன்னமும் டைட்டில் வைக்கவில்லையாம். அதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள கொச்சினில் நடந்து வருகிறது. ஆக, 2012ல் கும்கி, 2013ல் இவன் வேற மாதிரி என விக்ரம் பிரபு நடிப்பில் வருடம் ஒரு படம் வெளியான நிலையில், இந்த 2014ம் ஆண்டு அரிமா நம்பி, சிகரம்தொடு என இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து வெள்ளைக்கார துரையும் இந்த ஆண்டே வெளியாகிறதாம். ஆக, ஒரே வருடத்தில் 3 படங்கள் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிறது.